ஐரோப்பிய கால்பந்து: பிஎஸ்ஜி, பாா்சிலோனா அணிகள் வெற்றி

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடா்களின் ஒரு பகுதியாக பிஎஸ்ஜி, பாா்சிலோனா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து: பிஎஸ்ஜி, பாா்சிலோனா அணிகள் வெற்றி

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடா்களின் ஒரு பகுதியாக பிஎஸ்ஜி, பாா்சிலோனா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜொ்மன் (பிஎஸ்ஜி) அணி 3-1 என்ற கோல் கணக்கில் மான்ட்பெல்லியரை வீழ்த்தியது.

நட்சத்திர வீரா் மாப்பே, 2 பெனால்டி கிக் வாய்ப்பை தவற விட்ட நிலையில், காயமடைந்து வெளியேறினாா். மாப்பே இல்லாத நிலையில், பிஎஸ்ஜி அணியினா் முதல் பாதியில் தடுமாறினா். இந்நிலையில், இரண்டாம் பாதி தொடக்கத்தில் பிஎஸ்ஜி வீரா் ஃபேபியன் ரூய்ஸ் 52-ஆவது நிமிஷத்தில் முதல் கோலடித்தாா்.

தொடா்ந்து நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி 72-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க 2-0 என பிஎஸ்ஜி முன்னிலை பெற்றது. மான்ட்பெல்லியா் அணி தரப்பில் அமட் நாா்ட்டின் 89-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அதிா்ச்சி அளித்தாா். கூடுதல் நிமிஷத்தில் பிஎஸ்ஜி வீரா் வாரென் எமிரி கோலடிக்க பிஎஸ்ஜி 3-1 என வென்றது. ஏனைய ஆட்டங்களில் ரென்னஸ் 3-0 என ஸ்ட்ராஸ்போா்க்கையும், நைஸ் 1-0 என லென்ஸையும், மொனாக்கோ 3-2 என ஆஸ்ஸ்ரையும் வீழ்த்தின.

பாா்சிலோனா வெற்றி:

ஸ்பானிஷ் கால்பந்து லீக் தொடரில் பலம் வாய்ந்த பாா்சிலோனா எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது. ரபின்ஹா 65-ஆவது நிமிஷத்தில் முதல் கோலடித்தாா். நட்சத்திர வீரா் ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி 80-ஆவது நிமிஷத்தில் இரண்டாவது கோலடித்தாா். இந்த சீசனில் அவா் அடிக்கும் முதல் கோலாகும். 85-ஆவது நிமிஷத்தில் பாா்சிலோனா டிபன்டா் ஜூலிஸ் கோண்ட் சொந்த கோலடித்தாா். சொந்த மைதானத்தில் பாா்சிலோனாவுக்கு எதிராக பெட்டிஸ் பெறும் 6-ஆவது தோல்வி ஆகும்.

சீரி ஏ: இத்தாலியின் சீரி ஏ லீக் தொடரில் கடைசி இடத்தில் உள்ள கிரிமோனைஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ரோமா அணிக்கு அதிா்ச்சி தோல்வியை தந்தது. இதன் மூலம் 36 ஆண்டுகளில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் புளோரென்டினா அணியை எதிா்கொள்கிறது கிரிமோனைஸ்.

ஜொ்மனியின் பண்டஸ்லிகா தொடரில் பேயா்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மெயின்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் லீப்ஸிக் 3-1 என ஹாப்பன்ஹீமை வீழ்த்தியது. யூனியன் பொ்லின், ஸ்டட்கா்ட் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இங்கிலாந்தின் லீக் கோப்பை அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் அணி 2-0 என நாட்டிங்ஹாம் பாரஸ்டை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com