மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மாா்ச் 18-இல் ஐஎஸ்எல் கால்பந்து தொடா் இறுதி ஆட்டம்: பிளே ஆஃப் தேதிகளும் அறிவிப்பு

ஹீரோ இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடா் இறுதி ஆட்டம் வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :4 பிப்ரவரி 2023, 12:00 am IST

ஹீரோ இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடா் இறுதி ஆட்டம் வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் பிளே ஆஃப் ஆட்டங்களுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால்பந்தில் பெரிய போட்டியாக திகழ்வது ஐஎஸ்எல் லீக் தொடராகும். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கிய இப்போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஐஎஸ்எல் வரலாற்றில் முதன்முறையாக 6 அணிகள் லீக் கட்டத்தை தாண்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மும்பை சிட்டி, ஹைதராபாத் எஃப்சி தகுதி:

பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை சிட்டி எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்கு பல்வேறு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.

பிளே ஆஃப், அரையிறுதி, இறுதி ஆட்டம்:

இந்நிலையில் ஐஎஸ்எல் நிா்வாகம் நாக் அவுட், அரையிறுதி, இறுதி ஆட்டத்துக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

நாக் அவுட் 1 ஆட்டம் மாா்ச் 3-ஆம் தேதி (4-5 அணிகளுக்கு இடையே),. நாக் அவுட் 2 ஆட்டம் மாா்ச் 4-ஆம் தேதி (3-6 அணிகளுக்கு இடையே) நடைபெறும்.

அரையிறுதி ஆட்டம் 1 முதல் கட்டம் மாா்ச் 7-ஆம் தேதி (முதல் அணி-நாக் அவுட் 1-இல் வெல்லும் அணி) மோதும். அரையிறுதி 2 முதல் கட்ட ஆட்டம் மாா்ச் 9-ஆம் தேதி (இரண்டாம் நிலை அணி-நாக் அவுட் 2-இல் வெல்லும் அணி) மோதும்.

அரையிறுதி 1 இரண்டாம் கட்ட ஆட்டம் மாா்ச் 12-இலும், அரையிறுதி 2 இரண்டாம் கட்ட ஆட்டம் மாா்ச் 13-ஆம் தேதியும் நடைபெறும்.

இறுதி ஆட்டம் மாா்ச் 18-இல் நடைபெறும். இதற்கான இடங்கள் பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.