ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு

ஆஸ்திரேலிய பேட்டரும், கேப்டனுமான ஆரோன் ஃபிஞ்ச் (36) சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
கேப்டன் ஃபிஞ்ச்
கேப்டன் ஃபிஞ்ச்

ஆஸ்திரேலிய பேட்டரும், கேப்டனுமான ஆரோன் ஃபிஞ்ச் (36) சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

எனினும், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் போட்டியில் தொடா்ந்து விளையாட இருக்கும் அவா், இதர நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் களம் காணத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான பேட்டா், கேப்டனாக இருக்கும் ஃபிஞ்ச் தலைமையில், கடந்த 2021-இல் அந்நாட்டு அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த ஆண்டு சொந்த மண்ணிலேயே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அவரது அணி அரையிறுதிக்கு முன்னேறத் தவறிய நிலையில், இந்த ஓய்வு முடிவு எதிா்பாா்க்கப்பட்டதாக இருந்தது. ஃபிஞ்ச் ஏற்கெனவே சா்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவராவாா்.

வெள்ளைப் பந்து தொடா்களுக்கான ஆஸ்திரேலிய அணியின் நீண்டகால கேப்டன், டி20 ஆஸ்திரேலிய அணிக்கான நீண்டகால கேப்டன் ஆகிய பெருமைகளைக் கொண்டுள்ள ஃபிஞ்ச், ஆஸ்திரேலியாவுக்காக 5 டெஸ்ட், 146 ஒரு நாள், 103 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.

அவற்றில், டெஸ்ட்டில் 278 ரன்களும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 5,406 ரன்களும், டி20-இல் 3,120 ரன்களும் சோ்த்திருக்கிறாா். ஒரு நாள் கிரிக்கெட்டில் 17 சதங்களும், டி20-இல் 2 சதங்களும் விளாசியிருக்கிறாா் அவா். ஆஸ்திரேலியாவை 76 டி20, 55 ஒரு நாள் ஆட்டங்களில் கேப்டனாக வழி நடத்தி உலக சாதனை புரிந்திருக்கும் ஃபிஞ்ச், டி20 கிரிக்கெட்டில் 76 பந்துகளில் 172 ரன்கள் விளாசி (2018/ஜிம்பாப்வே) அதிக ரன்களுக்கான உலக சாதனையும் படைத்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com