ஜடேஜா அபாரம்: ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த 9 ஆஸி. பேட்டர்கள்! 

ஜடேஜா அபாரம்: ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த 9 ஆஸி. பேட்டர்கள்! 

தில்லி டெஸ்டில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 113 ரன்களுக்கு சுருட்டியது. 
Published on

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 262 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே கவாஜா ஜடேஜா பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசேன் சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த ஜோடி வீழ்ந்தது ஆஸி. அணியே தடுமாறியது. ஹெட் 43 ரன்களும், லபுசேன் 35 ரன்களும் எடுத்தனர்.

மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித்-9, கவாஜா-6, ரென்ஷா-2, ஹேன்ஸ்கோம்ப்-0, அலெக்ஸ் கேரி-7, கம்மின்ஸ்-0, லயன் -8, மர்ஃபி-3, குஹென்மன் -0. 

ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 113 ரன்களுக்கு ஆஸி. அணி சுருண்டது. 114 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 

கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் மீண்டும் சொதப்பி விட்டார். 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ரோஹித், புஜார ஆடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com