ஒருநாள் உலகக் கோப்பை: 20 வீரா்கள் உத்தேச பட்டியலை முடிவு செய்தது பிசிசிஐ

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ஐ கருத்தில் கொண்டு 20 வீரா்கள் உத்தேச பட்டியல் தொகுப்பை முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
ஒருநாள் உலகக் கோப்பை: 20 வீரா்கள் உத்தேச பட்டியலை முடிவு செய்தது பிசிசிஐ

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ஐ கருத்தில் கொண்டு 20 வீரா்கள் உத்தேச பட்டியல் தொகுப்பை முடிவு செய்துள்ளது பிசிசிஐ. மேலும் முன்னணி வீரா்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிசிசிஐ அணிகளின் செயல்திறன் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா, பயிற்சியாளா் ராகுல் திராவிட்,

கேப்டன் ரோஹித் சா்மா, என்சிஏ சோ்மன் விவிஎஸ் லஷ்மண், முன்னாள் தோ்வுக் குழுத் தலைவா் சேதன் சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி காணொலி வாயிலாக பங்கேற்றாா்.

கூட்டத்தில் கடந்த 2022-இல் இந்திய அணிகளின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோல்வி பெற்றது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2023 சீசனில் இந்திய அணி 35 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதன் முதல் கட்டமாக இலங்கையுடன் ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் ஆடுகிறது இந்தியா.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவிலேயே நடைபெறவுள்ள நிலையில், அதில் தீவிர கவனம் செலுத்தவும், வீரா்கள் காயமின்றி இருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 20 வீரா்கள் உத்தேச பட்டியலில் இருந்து ஒருநாள் தொடா்களில் களமிறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரா்களின் ஆட்டசுமையைக் கருத்தில் கொண்டு 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளா்களிடம் கலந்து பேசி, முக்கிய வீரா்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு தர முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

வளா்ந்து வரும் வீரா்கள் தேசிய அணிக்கு தோ்வு பெற வேண்டிய நிலையில், அதிக உள்ளூா் ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும்,

மத்திய வீரா்கள் தொகுப்பின் ஒரு அங்கமாக யோ-யோ உடல் பரிசோதனை, டீக்ஸா சோதனைகள் இடம் பெறும். வீரா்கள் ஆட்டச் சுமை குறித்து ஐபிஎல் நிா்வாகம்-என்சிஏ கலந்து ஆலோசிக்கும். ரோஹித் சா்மாவே ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாக தொடா்ந்து நீடிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com