மும்பையில் இந்தியா - இலங்கை மோதல்

இந்தியா - இலங்கை மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
மும்பையில் இந்தியா - இலங்கை மோதல்

இந்தியா - இலங்கை மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் இந்த ஆண்டில், இந்திய அணியின் அட்டவணையில் டி20 தொடர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. என்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முழுமையான அணியைத் தேர்வு செய்ய இந்தத் தொடர்கள் முக்கியத்தும் பெறுகின்றன. 

இந்தியாவைப் பொருத்தவரை, அணியின் முழு நேர டி20 கேப்டனாக ஹார்திக் பாண்டியா முக்கியத்தும் பெறுகிறார். மழையால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்துடனான டி20 தொடரில் அணியை வெற்றி பெறச் செய்தாலும், அவரது கேப்டன்சி திறமையை முழுமையாக வெளிப்படுத்த இந்தத் தொடர் இன்னும் வாய்ப்பளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இந்தத் தொடரில் இல்லை. எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் மூலமாக அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் பாண்டியாவுக்கு உள்ளது. 

இந்தத் தொடரில் அணியின் இன்னிங்ûஸ இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட் தொடங்கலாம் எனத் தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் அபாரம் காட்டி வரும் இருவரும், தேசிய அணியில் திறமையைக் காட்ட வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடத்தை உறுதி செய்ய இப்போதிருந்தே அவர்கள் செயல் வீரர்களாக மாற வேண்டும். 

ஒன் டவுன் இடத்தை அதிரடி வீரரும், உலகின் நம்பர் 1 டி20 பேட்டருமான சூர்யகுமார் யாதவ் உறுதி செய்கிறார். டி20-இல் இன்னும் அறிமுகம் ஆகாத ஷுப்மன் கில், மேலும் ஒரு தொடக்க வீரருக்கான வாய்ப்பாக இருக்கிறார். 
அதேபோல், 6 பெüலர்கள் வியூகத்துடன் பாண்டியா களம் காணும் பட்சத்தில் தீபக் ஹூடாவும் அந்த இடத்துக்கு பொறுத்தமாக இருப்பார். 

மிடில் ஆர்டரில், ராகுல் திரிபாதியை அறிமுகம் செய்வதற்கு பதிலாக, அனுபவமுள்ள சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெüலிங்கில் ஷிவம் மாவி, முகேஷ் குமார் என புதிய வீரர்கள் இருந்தாலும் முதல் ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்கே அணியின் முதல் தேர்வாக இருக்கலாம். 

ஆல்-ரவுண்டர் இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகியோர் இருக்க, யுஜவேந்திர சஹலும் பிடிக்க வாய்ப்புள்ளது. இலங்கை அணியைப் பொருத்தவரை, நடப்பு டி20 சாம்பியனாக நல்லதொரு உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது. அத்துடன், இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொடருக்கு அனுப்பியிருக்கிறது இலங்கை. 

நீண்ட காலத்துக்குப் பிறகு அணியில் இடம் பிடித்திருக்கும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சமிகா கருணாரத்னே ஆகியோர் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com