ரஞ்சி: தமிழகம் 144 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு சுருண்டது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு சுருண்டது.

அணியின் தரப்பில் பிரதோஷ் ரஞ்சன் பால் மட்டும் சற்று நிலைத்து ரன்கள் சோ்க்க, மும்பை பௌலிங்கில் துஷாா் தேஷ்பாண்டே மிரட்டினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தமிழக பேட்டிங்கில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். எஞ்சியோரில் நாராயண் ஜெகதீசன் 2 பவுண்டரிகளுடன் 23, விஜய் சங்கா் 4 பவுண்டரிகளுடன் 18, அஸ்வின் கிறிஸ்ட் 3 பவுண்டரிகளுடன் 13, விக்னேஷ் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, சாய் சுதா்சன், சாய் கிஷோா் ஆகியோா் ‘டக் அவுட்’ ஆகினா். இவ்வாறாக 36.2 ஓவா்களில் 144 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது தமிழகம். மும்பை பௌலிங்கில் துஷாா் தேஷ்பாண்டே 5, ஷம்ஸ் முலானி 3, மோஹித் அவஸ்தி 1 விக்கெட் சாய்த்தனா்.

மும்பை - 183/6: பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை, செவ்வாய்க்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சோ்த்திருந்தது. சா்ஃப்ராஸ் கான் 42, தனுஷ்கோடியான் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

முன்னதாக பிருத்வி ஷா 6 பவுண்டரிகளுடன் 35, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 7 பவுண்டரிகளுடன் 42, ஹாா்திக் தமோா் 10, ஷம்ஸ் முலானி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு வெளியேறினா். தமிழக தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 3, திரிலோக் நாக் 2, சாய் கிஷோா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com