2023, 2024 என இரு ஆண்டுகளிலும் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து 2022 ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
யாரும் எதிர்பாராத வகையில் 2022 ஆசியக் கோப்பைப் போட்டியை இலங்கை அணி வென்றது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருது ராஜபக்சவுக்கும் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கும் வழங்கப்பட்டன. முதலில் பாகிஸ்தானிடம் அடுத்ததாக இலங்கையிடம் என சூப்பர் 4 சுற்றில் விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்றது. இதனால் இந்திய அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது.
2023, 2024 என இரு ஆண்டுகளுக்கான ஆசியக் கோப்பை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
2018, 2022 ஆசியக் கோப்பைப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தியது. 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதால் போட்டி நடத்தும் நாடு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Presenting the @ACCMedia1 pathway structure & cricket calendars for 2023 & 2024! This signals our unparalleled efforts & passion to take this game to new heights. With cricketers across countries gearing up for spectacular performances, it promises to be a good time for cricket! pic.twitter.com/atzBO4XjIn
â Jay Shah (@JayShah) January 5, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸில் கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூல் செய்யும் முடிவைத் திரும்பப் பெற்றார் டிரம்ப்!

யுபிஎஸ்சி: லக்னௌ ஒப்பந்தத்தின் அம்சங்கள்!

சிறையில் விசாரணைக் கைதி மரணம்: 3 பேர் கைது

கோயில் நில அபகரிப்பு மீதான தடை நீக்க உத்தரவு! சிபிஐ(எம்) வரவேற்பு!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



