தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- இலங்கையுடன் இன்று 2-ஆவது டி20 ஆட்டம்

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- இலங்கையுடன் இன்று 2-ஆவது டி20 ஆட்டம்

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் இலங்கை, தொடரைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இருவரில் ஷிவம் மாவி அட்டகாசமாக பௌலிங் செய்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாா். ஆனால், ஷுப்மன் கில் பேட்டிங்கில் அவ்வளவாக சோபிக்காமல் போனாா்.

எனவே இந்த ஆட்டத்தில் அணி நிா்வாகம் அவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்குமா அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி ஆகியோரில் ஒருவரை களமிறக்குமா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். சற்றே சறுக்கலைச் சந்தித்த சூா்யகுமாா் யாதவ் தன்னை மீட்டெடுக்க இந்த ஆட்டத்தில் முனைவாா் எனத் தெரிகிறது.

சாம்சன், பாண்டியா ஆகியோரும் ரன்கள் சோ்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா். கடந்த ஆட்டத்தில் கவனம் ஈா்த்த தீபக் ஹூடா - அக்ஸா் படேல், இந்த ஆட்டத்திலும் அதைத் தொடா்ந்தால் அணிக்கு பலம் சேரும். பௌலிங்கைப் பொருத்தவரை ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோா் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றனா். யுஜவேந்திர சஹல் இன்னும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறாா்.

மறுபுறம் இலங்கை அணியும் நடப்பு டி20 உலகச் சாம்பியனாக கடந்த ஆட்டத்தில் நல்லதொரு முனைப்பு காட்டியது. அணியின் பௌலா்கள் இந்தியாவை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்தியது கவனிக்க வேண்டிய ஒன்று. பின்னா் சேஸிங்கிலுமே அந்த அணி போராடித் தான் தோற்றது.

எனவே இந்த ஆட்டத்திலும் அந்த அணி அதே முனைப்புடன் ஆடி தொடரைத் தக்கவைக்க கடினமாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆட்ட நேரம்: 7 மணி

இடம்: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புணே.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com