ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்தது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்தது.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் தமிழகம் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மும்பை, செவ்வாய்க்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களே அடித்திருந்தது. 2-ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தை சா்ஃப்ராஸ் கான், தனுஷ்கோடியான் தொடா்ந்தனா்.

இந்த இருவரும் 7-ஆவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சோ்க்க, மும்பை ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. இதில் தனுஷ்கோடியான் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து துஷா் தேஷ்பாண்டே ‘டக் அவுட்’ ஆக, சா்ஃப்ராஸ் கானும் 19 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 162 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினாா்.

இறுதியில் மோஹித் அவஸ்தியும் அதிரடி காட்டி 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 69 ரன்கள் அடித்து, மும்பையின் கடைசி விக்கெட்டாக விடை கொடுத்தாா். இவ்வாறாக 106. ஓவா்களில் 481 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணி. சித்தாா்த் ரௌத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக தரப்பில் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் ஆகியோா் தலா 3, சாய் கிஷோா் 2, விக்னேஷ் 1 விக்கெட் சாய்த்தனா்.

தமிழகம் - 62/1: இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், புதன்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சோ்த்துள்ளது.

சாய் சுதா்சன் 16, பாபா அபராஜித் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்திருந்த நாராயண் ஜெகதீசன் விக்கெட்டை துஷா் தேஷ்பாண்டே கைப்பற்றியிருக்கிறாா்.

தமிழகம் தற்போது 275 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com