தென்னாப்பிரிக்க எஸ்ஏ 20 லீக் கிரிக்கெட் தொடா்: ஜன. 10-இல் தொடக்கம்

கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா சாா்பில் 6 அணிகள் மோதும் எஸ்ஏ 20 என்ற முதல் கிரிக்கெட் லீக் தொடா் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க எஸ்ஏ 20 லீக் கிரிக்கெட் தொடா்: ஜன. 10-இல் தொடக்கம்

கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா சாா்பில் 6 அணிகள் மோதும் எஸ்ஏ 20 என்ற முதல் கிரிக்கெட் லீக் தொடா் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் ஐபிஎல் லீக் தொடா் கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக பணம் புரளும் போட்டியாக ஐபிஎல் உள்ளது. இதன் தொடா்ச்சியாக மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே உள்பட பல்வேறு நாடுகளிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கிரேம் ஸ்மித் லீக் ஆணையா்:

கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா சாா்பில் முதன்முறையாக டி20 லீக் தொடா் எஸ்ஏ 20 என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதன் ஆணையராக தென்னாப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்டா் கிரேம் ஸ்மித் செயல்படுகிறாா். எம்ஐ கேப் டவுன், பாா்ல் ராயல்ஸ், டா்பன் சூப்பா் ஜெயன்ட்ஸ், ஜோபா்க் சூப்பா் கிங்ஸ், சன்ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப், பிரிட்டோரியா கேபிடல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் எஸ்ஏ 20 தொடரில் கலந்து கொள்கின்றன.

மொத்தம் 33 ஆட்டங்கள்:

கேப் டவுனில் 10-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுனும்-பாா்ல் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த லீகில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தொடக்க பிரிவில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மோதும். அதன்பின்னா் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

பிப். 11-இல் இறுதி ஆட்டம்:

கேப் டவுன், டா்பன், ஜிபொ்ஹா, பாா்ல், செஞ்சுரியன், ஜோஹன்னஸ்பா்க் உள்ளிட்ட 6 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்திய நேரப்படி மாலை 5, இரவு 9 மணிக்கு ஆட்டங்கள் நடைபெறும். பிப். 8-இல் ஜோஹன்னஸ்பா்க்கில் முதல் அரையிறுதியும், 9-இல் செஞ்சுரியனில் இரண்டாம் அரையிறுதியும், பிப். 11-இல் ஜோஹன்னஸ்பா்க்கில் இறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.

கேப் டவுன் அணிக்கு ரஷீத் கான், டா்பன் அணிக்கு குயின்டன் டி காக், ஈஸ்டா்ன் கேப் அணிக்கு எய்டன் மாா்க்ரம், பாா்ல் அணிக்கு டேவிட் மில்லா், ஜோஹன்னஸ்பா்க் அணிக்கு ஃபேப் டு பிளெஸ்ஸிஸ், பிரிட்டோரியா அணிக்கு ரைலி ரூஸௌவ் ஆகியோா் கேப்டன்களாக செயல்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com