இன்றுமுதல் மலேசிய ஓபன் பாட்மின்டன்: சிந்து பங்கேற்கிறார்

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டி, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 
பி.வி. சிந்து
பி.வி. சிந்து

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டி, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 

இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களில் ஒருவரான பி.வி.சிந்து, கணுக்கால் காயத்துக்கான சிகிச்சைக்காக 5 மாதங்கள் ஓய்விலிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக இதில் களம் காண்கிறார். 

முதல் ஆட்டமே அவருக்கு சவாலாக அமையும் வகையில், முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை அவர் சந்திக்கிறார். இந்தியாவின் சாய்னா நெவால் - சீனாவின் ஹான் யுவையும், ஆகர்ஷி காஷ்யப் - சீன தைபேவின் சு வென் சியையும், மாளவிகா பன்சோத் - தென் கொரியாவின் ஆன் சி யங்கையும் சந்திக்கின்றனர். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் - சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணாயை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் - ஜப்பானின் கென்டோ நிஷிமோடோவுடன் மோதுகிறார். 

ஆடவர் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி கூட்டணி - தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வான் ஹோ ஜோடியை சந்திக்கிறார். மகளிர் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை - ஹாங்காங்கின் யுங் கா டிங்/யுக் புய் லாம் இணையுடன் மோதுகிறது. அஸ்வினி பட்/ஷிகா கெüதம் ஜோடி - தாய்லாந்தின் சுபிசரா பேவ்சம்பிரான்/புடிட்டா சுபாஜிரகுல் கூட்டணியை எதிர்கொள்கின்றனர். 

கலப்பு இரட்டையரில் இஷான் பட்நாகர்/தனிஷா கிராஸ்டோ - நெதர்லாந்தின் ராபின் டபேலிங்/செலினா பீக் ஜோடியுடன் விளையாடுகின்றனர். 
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மே மாதம் முதல் தொடங்கும் நிலையில், இந்த காலண்டரில் வரும் போட்டிகள் யாவும் இந்தியர்களுக்கு முக்கியமானவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com