முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை இன்று மோதல்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை இன்று மோதல்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற கையோடு, இந்த ஒரு நாள் தொடருக்கும் இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. மறுபுறம் இலங்கை அணியோ, ஆறுதலுக்காக இந்தத் தொடரையாவது கைப்பற்றும் முயற்சியிலிருக்கிறது. 
இந்திய அணியைப் பொருத்தவரை, ரோஹித் சர்மா, விராட் கோலி,கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இணைவது பலம்.

அதேவேளையில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீளாத நிலையில் இந்தத் தொடரிலிருந்து விலகியிருப்பது அணிக்கு சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்தத் தொடர் மட்டுமல்லாமல், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியிருக்கிறது. நடப்பாண்டு இறுதியில் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா அதற்கு முன்பாக 15 ஒரு நாள் ஆட்டங்களில் (ஆசிய கோப்பை போட்டி தவிர்த்து) விளையாட இருக்கிறது. 

இடையே, ஐபிஎல் போட்டியும் இருக்க, பெüலர்களுக்கான பணிச்சுமையை அணி நிர்வாகம் எவ்வாறு கையாள இருக்கிறது என்பது முக்கிய விவாதமாக இருக்கிறது. 

பேட்டிங்கில் முதல் 5 வீரர்கள் இடத்தில், ரோஹித் (1) மற்றும் கோலி (3) ஆகியோருக்கான இடங்கள் உறுதியாக இருக்கும் நிலையில், தொடக்க வீரர்களில் ஒருவராக இஷான் கிஷணுக்குப் பதில், ஷுப்மன் கில் களம் காணுவார் எனத் தெரிகிறது. இதனால் விக்கெட் கீப்பர் வாய்ப்புடன் கே.எல்.ராகுல் பிளேயிங் லெவனில் வருவார். எஞ்சிய ஒரு இடத்துக்கு ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் இடையே போட்டி இருக்கும். 

பெüலிங்கில், மூத்த வீரர் முகமது ஷமி நிச்சயம் இடம் பிடிக்கும் நிலையில், அவரோடு துணை நிற்க முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோரில் அணி நிர்வாகம் எவரைத் தேர்வு செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

ஆல்ரவுண்டர் வாய்ப்புக்கு ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல் இணைய, சுழற்பந்து வீச்சுக்கும் யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ் இடையே போட்டி ஏற்படுகிறது. 

இலங்கை அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் டாப் ஆர்டரில் பதும் நிசங்கா பலம் சேர்க்க, மிடில் ஆர்டரில் சரித் அசலன்கா ரன்கள் அடிப்பதில் முனைப்பு காட்டுகிறார். பெüலிங்கில் ஜெஃப்ரி வாண்டர்சே முக்கிய நபராக இருப்பார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com