ஆப்கானிஸ்தான் தொடர்: ஆஸ்திரேலிய அணி விலகல்

ஒருநாள் தொடரில் விளையாடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்: ஆஸ்திரேலிய அணி விலகல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்குக் கடந்த டிசம்பர் மாதம் தலிபான் அரசு தடைவிதித்தது. பிறகு தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் உள்பட ஆடவர் மற்றும் மகளிர் விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவளிக்கிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து அந்நாட்டு பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாடுபடும். இவ்விஷயத்தில் ஆதரவு அளித்த ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com