விபத்துக்குப் பிறகு முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அறுவை சிகிச்சை முடிந்து முதன்முறையாக ட்வீட் செய்துள்ளார். 
விபத்துக்குப் பிறகு முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட்!

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.

ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். ரிஷப் பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. 

விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் யாரென்று கூட தெரியாமல் உடனடியாக உதவிக்கரம் நீட்டிய ஓட்டுநா் சுஷீல் குமாா் மற்றும் நடத்துநா் பரம்ஜீத் ஆகிய இருவரும் சிறந்த மனிதநேயத்துக்கு உதாரணமாக விளங்குவதாக ஹரியாணா மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சா் மூல்சந்த் சா்மா பாராட்டு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விபத்துக்குப் பிறகு முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட் செய்துள்ளார். இதில் அவர் கூறியதாவது: 

நான் குணமடைய வேண்டுமெனவும் ஆறுதல் வார்த்தை கூறிய எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கும் எனது நெஞ்சின் அடியாழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்களை கிரிக்கெட் ஆடுகளத்தில் காண ஆவலாக உள்ளேன். 

எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பிசிசிஐ மற்றும் அரசாங்கத்திற்கு எனது நன்றிகள். என்னால் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியவில்லை. ஆனால் என்னை காப்பாற்றிய அந்த இரண்டு ஹீரோக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜத் குமார், நிஷு குமாருக்கு நன்றி. நான் எப்போதும் அவர்களுக்கு நன்றியுடனும் தீராத கடன்பட்டும் இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com