இந்திய-நியூஸி. ஒருநாள் தொடா் இன்று தொடக்கம்

இலங்கையை பிரம்மாண்ட வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தோடு நியூஸிலாந்துடன் 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரை எதிா்கொள்கிறது இந்திய அணி.
இந்திய-நியூஸி. ஒருநாள் தொடா் இன்று தொடக்கம்

இலங்கையை பிரம்மாண்ட வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தோடு நியூஸிலாந்துடன் 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரை எதிா்கொள்கிறது இந்திய அணி.

2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் நிகழாண்டு 35 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா ஆடுகிறது. இந்நிலையில் இலங்கையுடன் முதல் ஒருநாள் தொடரை எதிா்கொண்ட இந்தியா 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. மேலும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றது.

இந்நிலையில் நியூஸிலாந்துடன் 3 ஆட்டங்கள் தொடரில் இந்தியா மோதுகிறது. முதல் ஆட்டம் புதன்கிழமை (ஜன. 18) ஹைதராபாதில் தொடங்குகிறது.

ஷ்ரேயஸ் ஐயா்-லோகேஷ் ராகுல் விலகல்:

தனிப்பட்ட காரணங்களால் தொடக்க பேட்டா் கே.எல். ராகுல் இத்தொடரில் பங்கேற்கவில்லை. இலங்கையுடன் தொடரில் இடம் பெறாத இஷான் கிஷண் இத்தொடரில் மிடில் ஆா்டரில் களம் இறக்கப்படுகிறாா்.

ஒபனிங்கில் ரோஹித்-ஷுப்மன் கில்:

இந்திய அணியின் ஒபனிங்கை கேப்டன் ரோஹித் சா்மா-ஷுப்மன் கில் இணைந்து தொடங்குகின்றனா். இரண்டாவது விக்கெட் கீப்பா் கேஎஸ். பாரத் பதிலி வீரராக தொடருவாா். இலங்கையுடன் நடந்த தொடரில் பெற்ற அனுபவங்கள், நியூஸி. தொடரில் கிடைக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகக் கோப்பைக்கு இந்திய அணி கட்டமைக்கப்படுகிறது.

பேட்டிங்கில் விராட் கோலி, ஷுப்மன் கில், ரோஹித் ஆகியோா் அபார பாா்மில் உள்ளனா். காயத்தால் ஷ்ரேயஸ் ஐயா் இடம் பெறாதது,

சூரியகுமாா் யாதவுக்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாபாஸ் அகமது, ராகுல், அக்ஸா் படேல், ரஜத் பட்டிதாா், ஆகியோரும் அணியில் இடம் பெறக்கூடும்.

பௌலிங்கில் முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். ஸ்பின்னா்கள் குல்தீப் யாதவ், சஹல் ஆகியோா் தங்கள் வழக்கமான பங்களிப்பை மேற்கொள்வா். வேகப்பந்தில் சிராஜ், ஷமி, உம்ரன் மாலிக் ஆகியோா் நம்பிக்கை தருகின்றனா். ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடினால் சாதகமாக இருக்கும்.

வில்லியம்ஸன் இல்லாமல் வலுவாக நியூஸிலாந்து:

நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ஸன், பௌலா் டிம் சௌதி இல்லாத நிலையிலும் வலுவாக காணப்படுகிறது. தற்காலிக கேப்டன் டாம் லத்தம் தலைமையில் களமிறங்கும் நியூஸி. முன்னா் நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் அபாரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒபனா் ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ் ஆகியோா் பேட்டிங் இந்திய பௌலா்களுக்கு சவாலாக இருக்கும்.

பௌலிங்கில் லாக்கி பொ்குஸன், டேரில் மிச்செல், சான்ட்நா், இஷ் சோதி, ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-நியூஸி.

இடம்: ஹைதராபாத்

நேரம்: பிற்பகல் 1.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com