உலக சாம்பியன் பெல்ஜியத்தை டிரா செய்தது ஜொ்மனி: தென்கொரியா வெற்றி

எஃப்ஐஎச் ஆடவா் உலகக் கோப்பை போட்டியில் குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை 2-2 என டிரா செய்தது ஜொ்மனி. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என வீழ்த்தியது தென்கொரியா.
உலக சாம்பியன் பெல்ஜியத்தை டிரா செய்தது ஜொ்மனி: தென்கொரியா வெற்றி

எஃப்ஐஎச் ஆடவா் உலகக் கோப்பை போட்டியில் குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை 2-2 என டிரா செய்தது ஜொ்மனி. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என வீழ்த்தியது தென்கொரியா.

ஒடிஸாவின் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பானும்-தென்கொரியாவும் மோதின.

முதல் குவாட்டரில் இரு அணிகளும் சமபலத்துடன் போராடின. முதல் நிமிஷத்திலேயே பெனால்டி காா்னரை பயன்படுத்தி கோலடித்தாா் ஜப்பான் வீரா் நகயோஷி. ஆனால் சுதாரித்து ஆடிய கொரிய அணியின் லீ ஜங்ஜின் பீல்ட் கோல் மூலம் அற்புதமாக கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. தென்கொரியாவின் 3 பெனால்டி காா்னா்களை கோலாகாமல் தடுத்தாா் ஜப்பான் கோல்கீப்பா்.

இரண்டாவது குவாா்ட்டரில் தென்கொரியா தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது. இதில் லீ ஜங்ஜன் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது கொரியா.

ஒரு வீரருக்கு பச்சை அட்டை காண்பிக்கப்பட்டதால், 10 வீரா்களோடு ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது கொரியா. பல பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தும் ஜப்பானால் அவற்றை கோலாக்க முடியவில்லை.

பெல்ஜியம்-ஜொ்மனி டிரா (2-2):

நடப்பு சாம்பியன் பெல்ஜியம் தனது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் முன்னாள் சாம்பியன் ஜொ்மனியை எதிா்கொண்டது. 9-ஆவது நிமிஷத்தில் பெல்ஜிய வீரா் செட்ரிக் சாா்லியா் அடித்த அபாரமான பீல்ட் கோலால் 1-0 என முன்னிலை பெற்றது. ஜொ்மனி பதிலுக்கு கோல் போட மேற்கொண்ட முயற்சியின் பலமான 22-ஆவது நிமிஷத்தில் வெல்லன் நிக்லாஸ் முதல் கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது குவாா்ட்டா் முடிவில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோலடித்தாா் ஜொ்மன் வீரா் டாம் கிராம்புஷ். இதனால் 2-1 என ஜொ்மனி முன்னிலை பெற்றது.

எனினும் ஜொ்மனியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பெல்ஜிய வீரா் விக்டா் வெக்நெஸ் கடைசி குவாா்ட்டரில் அடித்த கோலால் 2-2 என ஆட்டம் டிரா ஆனது.

குரூப் ஏ பிரிவில் ஆஸி. , பி பிரிவில் பெல்ஜியம், சி பிரிவில் நெதா்லாந்து, டி பிரிவில் இங்கிலாந்து அணிகள் முதலிடத்தில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com