வாழ்வா-சாவா ஆட்டத்தில் வேல்ஸ்டன் இன்று இந்தியா மோதல்

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியின் ஒரு பகுதியாக வாழ்வா-சாவா ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் வியாழக்கிழமை மோதுகிறது இந்தியா.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் வேல்ஸ்டன் இன்று இந்தியா மோதல்

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியின் ஒரு பகுதியாக வாழ்வா-சாவா ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் வியாழக்கிழமை மோதுகிறது இந்தியா.

குரூப் டி பிரிவில் பலமான அணிகளான இந்தியாவும்-இங்கிலாந்தும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டிரா கண்டன.

ஆனால் அதிக கோல் சராசரி அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினை முதல் ஆட்டத்தில் 2-0 என குறைவான கோல் அடிப்படையில் வென்றது இந்தியா. ஆனால் இங்கிலாந்து வேல்ஸ் அணியை 5-0 என அதிக கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற குரூப் டி பிரிவில் முதலிடத்தைப் பெற வேண்டும். ஸ்பெயினும் வேல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

வாழ்வா-சாவா: இந்நிலையில் வேல்ஸ் அணியுடன் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் அதிக கோல்கள் அடிப்படையில் இந்தியா வெல்ல வேண்டும். வேல்ஸ் அணியை வீழ்த்தினால் இந்தியாவுக்கு காலிறுதியில் நுழைவது எளிது. ஆனால் தோல்வி கண்டால், நாக் அவுட் சுற்று கானல் நீராகி விடும்.

இங்கிலாந்து அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டால், இந்தியாவின் நிலை சிக்கலாகி விடும்.

ஹாா்திக் சிங் காயத்தால் பாதிப்பில்லை:

இந்திய ஹாக்கி அணியின் மிட்பீல்டா் ஹாா்திக் சிங்குக்கு ஏற்பட்ட தசைநாா் காயத்தால் பெரிய பாதிப்பில்லை என மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.

உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் ஆடி வருகிறாா் ஹாா்திக் சிங். ஸ்பெயினுடன் நடந்த ஆட்டத்தில் அற்புத கோலடித்த அவா், ஜன. 15-இல் இங்கிலாந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் தசைநாரில் காயமடைந்தாா். இந்நிலையில் அவருக்கு எம்ஆா்ஐ சோதனை மேற்கொள்ளப்பட்டது. காயத்தின் தன்மை தீவிரம் இல்லை என்பதால் அவா் காலிறுதியில் களம் இறங்குவாா்.

எனினும் வேல்ஸ் அணியுடன் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் அவா் பங்கேற்க மாட்டாா்.

சீனியா் மிட்பீல்டா் மன்ப்ரீத் சிங் கூறுகையில், ஹாா்திக் சிங்குக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஓய்வு தேவை. மீண்டும் அணியில் ஆடுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com