‘நான் பார்த்ததிலேயே சிறந்த டி20 போட்டி..’- ஸ்மித்தின் சதம் பற்றி சிட்னி சிக்ஸர்ஸ் கேப்டன்!
By DIN | Published On : 22nd January 2023 02:01 PM | Last Updated : 22nd January 2023 03:12 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
பிக் பாஷ் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது சதமடித்து அசத்தியுள்ளார் பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித்.
பிரபல ஆஸி. பேட்டர் ஸ்மித், ஜனவரி 17 அன்று பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்தார். பிபிஎல் போட்டியில் ஸ்மித் எடுத்த முதல் சதம் அது. இந்நிலையில் சிட்னி சிக்ஸர்ஸ் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான பிபிஎல் ஆட்டம் சிட்னியில் நேற்று நடைபெற்றது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்மித், 66 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்து பிபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது சதமடித்தார். பிபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டன் ஹென்ரிக்ஸ், “நான் ஸ்மித்துடன் 15-20 வருஷங்கள் கிரிக்கெட் ஆடியுள்ளேன். இதுதான் நான் பார்த்ததிலேயே சிறந்த டி20 போட்டி என்பேன். இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது கடினம். உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை. அற்புதமான பேட்டிங்” என தெரிவித்துள்ளார்.