உலகக் கோப்பை: வெளியேறியது இந்தியா 

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது. 
உலகக் கோப்பை: வெளியேறியது இந்தியா 

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது. 

போட்டியை நடத்தும் இந்தியா நேரடியாக காலிறுதிக்குத் தகுதிபெறத் தவறிய நிலையில், "கிராஸ்ஓவர்' ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ள, முதலில் அந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட "ஷூட் அவுட்' வாய்ப்பில் நியூஸிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. 

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக லலித்குமார் உபாத்யாய 17-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, தொடர்ந்து சுக்ஜீத் சிங் 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்து அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார். 

இந்நிலையில், நியூஸிலாந்துக்காக சாம் லேன் 28-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 43-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கேன் ரஸ்ùஸல் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 

விடாமல் போராடிய இந்தியாவுக்காக வருண் குமார் 40-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை மீண்டும் முன்னிலைப்படுத்த, மறுபுறம் நியூஸிலாந்தின் சீன் ஃபிண்ட்லே 49-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்து இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார். இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்க நடத்தப்பட்ட "ஷூட் அவுட்' வாய்ப்பில் நியூஸிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. அதில் இந்தியாவுக்காக ஹர்மன்பிரீத் சிங், ராஜ்குமார் பால் (2), சுக்ஜீத் சிங் ஆகியோர் கோலடிக்க, நியூஸிலாந்து தரப்பில் நிக் வுட்ஸ், சீன் ஃபிண்ட்லே (2), ஹேடன் ஃபிலிப்ஸ், சாம் லேன் ஆகியோர் ஸ்கோர் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.  அடுத்ததாக நியூஸிலாந்து, தனது காலிறுதியில் பெல்ஜியத்தை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது. 

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் - மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அதில் அந்த அணி ஆஸ்திரேலியாவை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது. முன்னதாக ஸ்பெயின் - மலேசியா மோதிய ஆட்டமும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தலா 2 கோல்களுடன் டிரா-வில் முடிய, "ஷூட் அவுட்' வாய்ப்பில் ஸ்பெயின் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com