காதலியைத் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேல் (படங்கள்)

29 வயது அக்‌ஷர் படேல் இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 49 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
காதலியைத் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேல் (படங்கள்)

பிரபல கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

29 வயது அக்‌ஷர் படேல் இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 49 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில், அக்‌ஷர் படேல், தனது காதலி மேஹா படேலை வதோதராவில் வியாழக்கிழமை திருமணம் செய்தார். மேஹா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். 

அக்‌ஷர் படேலின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனாட்கட், இன்ஸ்டகிராமில் மணமக்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் அக்‌ஷர் படேல் திருமணப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com