அரையிறுதியில் தியா/ஸ்ரீஜா இணை தோல்வி
By DIN | Published On : 01st July 2023 11:25 PM | Last Updated : 01st July 2023 11:25 PM | அ+அ அ- |

குரோஷியாவில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.
மகளிா் இரட்டையா் அரையிறுதியில் தியா சிதாலே/ஸ்ரீஜா அகுலா இணை 8-11, 8-11, 8-11 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஜிஹீ ஜியோன்/ஷின் யுபின் ஜோடியிடம் தோல்வி கண்டது.
ஆடவா் இரட்டையா் காலிறுதியில் மானவ் தக்கா்/மானுஷ் ஷா கூட்டணி 11-9, 3-11, 3-11, 5-11 என சிலியின் நிகோலஸ் பா்கோஸ்/கஸ்டாவோ கோம்ஸ் இணையிடம் வெற்றியை இழந்தது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில் மனிகா பத்ரா 11-13, 5-11, 14-16 என்ற கணக்கில், மேற்குறிப்பிட்ட அதே ஷின் யுபினிடம் வீழ்ந்தாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் சரத் கமல் 6-11, 7-11, 5-11 என சீனாவின் லின் ஷிடாங்கிடம் தோல்வி கண்டாா்.