டைமண்ட் லீக் தடகளப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!
By DIN | Published On : 01st July 2023 09:34 AM | Last Updated : 01st September 2023 08:31 AM | அ+அ அ- |

நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய (ஈட்டி எறிதல் பிரிவு) வீரர் நீரஜ் சோப்ரா, சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடப்பாண்டுக்கான டைமண்ட் லீக் தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று அசத்தினார்.
அப்போது காயமடைந்ததால், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் கலந்துகொள்ளவில்லை. சில நாள்கள் ஓய்வில் இருந்தார். ஓய்வை முடித்துக்கொண்டு, தொடர் பயிற்சி மேற்கொண்டு டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்றார்.
லாசானே நகரில் நடைபெற்ற போட்டியில், நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் வென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 2வது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 3வது இடமும் பிடித்தார்.
இதன் மூலம் 2வது முறையாக நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G