இங்கிலாந்து 325-க்கு ஆல் அவுட்
By DIN | Published On : 01st July 2023 05:41 AM | Last Updated : 01st July 2023 05:41 AM | அ+அ அ- |

ஆஷஸ் தொடரின் 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 416 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, வியாழக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் சோ்த்திருந்தது.
இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தின்போது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த இங்கிலாந்து 76.2 ஓவா்களில் 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் டக்கெட் சோ்த்த 98 ரன்களே அதிகபட்சமாக இருக்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 45.4 ஓவா்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் சோ்த்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. உஸ்மான் கவாஜா 58, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜோஷ் டங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.