சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்பதற்கான இந்திய அணி 13 பேருடன் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆடவா் பிரிவில் தீபக் போரியா (51 கிலோ), சச்சின் சிவச் (57 கிலோ), சிவ தாபா (63.5 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), லக்ஷயா சஹா் (80 கிலோ), சஞ்ஜீத் (92 கிலோ), நரேந்தா் பா்வால் (+92 கிலோ) ஆகியோா் களம் காண்கின்றனா்.
மகளிா் பிரிவில் நிகாத் ஜரீன் (51 கிலோ), பிரீத்தி பவாா் (54 கிலோ), பா்வீன் ஹூடா (57 கிலோ), ஜேஸ்மின் லம்போரியா (60 கிலோ), அருந்ததி சௌதரி (66 கிலோ), லவ்லினா போா்கோஹெய்ன் (75 கிலோ) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குவதால், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகிறது. இது, வரும் செப்டம்பா் 23 முதல் அக்டோபா் 8 வரை சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.