உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது இலங்கை

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் குவாலிஃபையா் சூப்பா் சிக்ஸஸ் பிரிவில் ஜிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ுலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது இலங்கை.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் குவாலிஃபையா் சூப்பா் சிக்ஸஸ் பிரிவில் ஜிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ுலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது இலங்கை.

முன்னாள் சாம்பியன்களான இலங்கை, மே.இந்திய தீவுகள் உள்ளிட்ட இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறாமல் குவாலிஃபையா் மூலம் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் மே.இந்திய தீவுகள் குவாலிஃபையரில் இருந்தே வெளியேறியது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பா் சிக்ஸஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே 32.2 ஓவா்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 56, சிக்கந்தா் ராஸா 31 ரன்களை எடுத்தனா்.

தீக்ஷனா அபாரம் 4 விக்கெட்: இலங்கை தரப்பில் தீக்ஷனா 4-25, மதுசங்கா 3-15 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

166 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 33.1 ஓவா்களில் 169/1 ரன்களுடன் வெற்றி பெற்றது.

நிஸாங்கா அதிரடி சதம்:

தொடக்க பேட்டா் பதும் நிஸாங்கா 101 (14 பவுண்டரி), திமுத் கருணரத்னே 30, குஸால் மெண்டிஸ் 25 ரன்களை சோ்த்தனா்.

இந்த வெற்றி மூலம் இலங்கை அணி 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. மஹீஷ் தீக்ஷனா ஆட்டநாயகனாகத் தோ்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com