100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஷஸ் தொடரின் இன்றைய போட்டி ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஷஸ் தொடரின் இன்றைய போட்டி ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்டீவ் ஸ்மித். கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார். தனது அறிமுகப் போட்டியில் 21 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தப் போட்டியில் 8-வது வீரராக அவர் களமிறங்கினார். ஷேன் வார்னேவுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அந்த இடத்தை நிரப்ப கிட்டத்தட்ட 10-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்களை உபயோகப்படுத்தியது. அதில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர். ஆனால், அவர் பந்துவீச்சைக் காட்டிலும் பேட்டிங்கிலேயே தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.

இன்று தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 9,113 ரன்கள் குவித்துள்ளார். அவர் 32 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 239 ரன்கள். அவரது சராசரி 59.56 ஆகும்.

இந்த ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டீவன் ஸ்மித், இன்று தனது 100-வது போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அண்மையில், அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 32-வது சதத்தினை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த 2-வது  வீரர் என்ற சாதனையையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 174 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இலங்கை அணியின் குமார் சங்ககாரா 172 இன்னிங்ஸில் 9000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 32 சதங்கள் அடித்துள்ள ஸ்மித் ஆஷஸ் தொடரில் மட்டும் 12 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம், ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருந்த ஜேக் ஹாப்ஸின் சாதனையை அவர் சமன் செய்தார். டான் பிராட்மேன் 19 சதங்களுடன் ஆஷஸில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

அண்மையில், ஸ்மித் அடித்த சதம் இங்கிலாங்துக்கு எதிராக அவரது 8-வது சதமாகும். இதன் மூலம் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில் 11 சதங்களுடன் டான் பிராட்மேன் 11 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com