தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை!
By DIN | Published On : 12th July 2023 09:31 PM | Last Updated : 12th July 2023 09:31 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணிக்காக 92வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்டில் 474 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் 2வது இடத்திலும் இருக்கிறார்.
இந்திய அணி தற்போது மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.
தற்போது, டேகனரின் சந்திரபால் விக்கெட்டினை அஸ்வின் எடுத்துள்ளார். இவரது அப்பாவான ஷிவ்நரைன் சந்திரபால் விக்கெட்டினையும் 2011இல் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
Historic moment in Indian Test cricket.
— Johns. (@CricCrazyJohns) July 12, 2023
Ashwin becomes the first Indian to take father - son wicket in Tests. pic.twitter.com/7dRzdxWbVf
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...