
மேற்கு மண்டலம்- தென் மண்டலம் இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் தென்மண்டலம் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய மேற்கு மண்டலம் 51 ஓவா்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்மண்டலம் தரப்பில் வித்வத் காவேரப்பா 7-53 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் மண்டல் 81.1 ஓவா்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி 42, புய் 37, வாஷிங்டன் சுந்தா் 37 ரன்களை எடுத்தனா். மேற்கு மண்டலம் தரப்பில் டிஏ ஜடேஜா 5-40 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இதையும் படிக்க: இலங்கை-பாகிஸ்தான் முதல் டெஸ்ட்: தடுமாறும் இலங்கை அணி (58/4)
மேற்கு மண்டல அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 62.3 ஓவா்களில் 182/5 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் பிரியங் பஞ்சால் 92 ரன்களுடன் களத்தில் இருந்தனர். சாம்பியன் பட்டத்தை வெல்ல மேற்கு மண்டலத்துக்கு 116 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
64.1 ஓவரில் கேப்டன் பிரியங் பஞ்சாலும் காவேரப்பா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் அணி 20 ஓவர் தாக்குப் பிடித்து 84.2 ஓவரில் அனைத்து விக்கெட்டினையும் இழந்தது. முலானி-2, அதிட் ஷேத் -9, டிஏ ஜடேஜா- 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
சாய் கிஷோர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். வித்வத் காவேரப்பா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
கேப்டன் ஹனுமா விஹாரி கோப்பையை பெற்று வீரர்களுடன் கொண்டாடினார். இது தென் மண்டல அணியின் 14வது துலீப் கோப்பை சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.