ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகள் விளையாடியுள்ளேன்; ஆனால்... : வேதனையை பகிர்ந்த சஹால்!
By DIN | Published On : 16th July 2023 03:52 PM | Last Updated : 16th July 2023 03:52 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
8 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 2022 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 32 வயதான இவர் 2022இல் ஊதா நிறத் தொப்பி (அதிக விக்கெட்டுகளுக்காக) விருது வாங்கினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மே.இ. தீவுகள் அணி வீரர் டிவைன் ப்ராவோ 183 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் 145 போட்டிகளில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சஹால் 187 விக்கெட்டுகள் எடுத்து ப்ராவோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: துலீப் கோப்பை: தென் மண்டல அணி 14வது முறையாக சாம்பியன்!
இந்நிலையில் 2022 ஏலத்தில் ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து பதிவு செய்துள்ளார். நேர்காணல் ஒன்றில் சஹால் கூறியதாவது:
ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் ஆர்சிபி அணியிடமிருந்து ஒழுங்கான தகவல் தெரிவிக்கவில்லை. எல்லோரையும் விட எனக்காக ஏலத்தில் செல்லுவேனென சத்தியம் செய்தனர். ஆர்சிபி அணிகளுக்காக 8 ஆண்டுகள் விளையாடினேன். ஏலத்தில் எடுக்காததால் நான் மிகவும் கோபமடைந்தேன். சின்னசுவாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
இதையும் படிக்க: இலங்கை-பாகிஸ்தான் முதல் டெஸ்ட்: தடுமாறும் இலங்கை அணி (58/4)
விராட் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் தலைமையில் சிறப்பாக விளையாடினேன். ஆர்சிபியில் எனக்கு 16 ஓவர் பின்பு பௌலிங் தரமாட்டார்கள். ஆனால் ஆர்ஆர் அணியில் டெத் ஓவரும் வீசினேன். எனவே எது நடந்தாலும் நல்லதிற்காகவே.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...