விம்பிள்டன் சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ்!

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார்.
காா்லோஸ் அல்கராஸ்
காா்லோஸ் அல்கராஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார்.

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்படன், ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. விறுவிறுப்பான சுற்றுகளின் இறுதிக்கட்டத்தில், அல்கராஸ், ஜோகோவிச் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஜோகோவிச் (36), அல்கராஸ் (20) இடையே 16 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் மோதும் வீரா்களின் அதிகபட்ச வயது வித்தியாசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருமே இப்போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய அனைத்து சுற்றுகளிலும் மொத்தமாகவே 2 செட்களை மட்டுமே இழந்திருந்தனா். அத்துடன், ஆடுகளத்தில் அவா்கள் களமாடிய கால அளவும் ஏறத்தாழ சமமாகவே இருந்தது.

இந்நிலையில், பரபரப்பான இறுதிப் போட்டியில் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியனானார் அல்கராஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com