39 வயதிலும் தீயாய் ஃபீல்டிங் செய்கிறார்: டு பிளெஸ்ஸியை புகழும் ரசிகர்கள்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி பிடித்த கேட்ச்சிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
படம்: ட்விட்டர் | டிஎஸ்கே
படம்: ட்விட்டர் | டிஎஸ்கே

எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூலை 13 முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகளும் 3 அணிகளை விலைக்கு வாங்கி விளையாடுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 

இதில் டிஎஸ்கே அணிக்காக கேப்டன் செய்கிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எப்போதும் டி பிளெஸ்ஸியை ‘எல்லைச்சாமி’ என அன்போடு அழைப்பார்கள். காரணம் அவரது ஃபீல்டிங். எல்லைக் கோட்டிற்கு அருகில் நின்றிருந்து அவர் பிடிக்த்த கேட்ச்கள் ஏராளம். 

தற்போது மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் டிம் டேவிட் அடித்த பந்தினை ஓடி வந்து கேட்ச் பிடிப்பார் டு பிளெஸ்ஸி. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17 ரன்கள் வித்தியாசத்தில் டிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. 

இந்த விடியோவிற்கு ரசிகர்கள், “எல்லைசாமி” “39 வயதிலும் தீயாய் ஃபீல்டிங் செய்கிறார்” என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com