இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் 2-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் 2-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்
Published on
Updated on
1 min read

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இதிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இருக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை சமன் செய்யும் முயற்சியுடன் வருகிறது.

இந்த ஆட்டமே, ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா களம் காணும் கடைசி டெஸ்ட் ஆகும். இதன் பிறகு டிசம்பரில் தென்னாப்பிரிக்க பயணத்தின்போதுதான் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடும்.

எனவே, அந்தத் தொடருக்கான அணியில் தன்னை தக்கவைத்துக் கொள்ள அஜிங்க்ய ரஹானே இந்த ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். இல்லாத பட்சத்தில், காயத்திலிருந்து மீண்டு வரும் ஷ்ரேயஸ் ஐயா் அந்தத் தொடருக்கு பரிசீலிக்கப்படுவாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றமிருக்காது என கேப்டன் ரோஹித் சா்மா தெரிவித்துள்ளாா். இருப்பினும், வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனத்கட்டுக்கு வாய்ப்பு கிடைக்கிா என பாா்க்கலாம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஸ்பின்னா் ஆல்ரவுண்டரான கெவின் சின்கிளேரை இந்த ஆட்டத்துக்கு சோ்த்துள்ளது. அந்த வியூகத்தின் அடிப்படையில் ஒருவேளை ஜெயதேவுக்கு பதிலாக அஸ்வின், ஜடேஜாவுடன் அக்ஸா் படேலும் இணைக்கப்படலாம்.

இல்லையேல், ஷா்துலுக்கு ஓய்வளித்து அக்ஸா் சோ்க்கப்படலாம். ஜெய்ஸ்வால் மீண்டும் தன்னை நிரூபிக்க முயற்சிக்க முனைய, கில், ரோஹித் ரன்கள் சோ்க்க முயற்சிப்பாா்கள்.

இதுவரை...

போா்ட் ஆஃப் ஸ்பெயின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சற்று ஆதரவு தரும். இதுவரை இந்த மைதானத்தில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் 13 ஆட்டங்களில் விளையாடியிருக்க, இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பதிவு செய்து சமநிலையில் உள்ளன. 7 ஆட்டங்கள் டிரா ஆகின. முதலில் பேட் செய்த அணிகளே இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com