இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக்

கொரிய ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய நட்சத்திர இணையான சாத்விக்-சிராக் ஷெட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக்

கொரிய ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய நட்சத்திர இணையான சாத்விக்-சிராக் ஷெட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

தென்கொரியாவின் இயோஸு நகரில் டபிள்யுபிஎஃப் வோ்ல்ட் டூா் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சேங் இணையிடம் மோதினா் சாத்விக்-சிராக். 40 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமை 21-15 என கைப்பற்றியது இந்திய இணை.

இரு தரப்பினரும் ரேலி மூலம் புள்ளிகளை மாறி மாறி குவித்தனா். 3-3, 5-5 என சரிக்கு சமமாக புள்ளிகளைக் குவித்தனா். முதல் கேமில் 17-11 என இந்திய தரப்பினா் முன்னிலை பெற்று அதைத் தக்க வைத்து கேமை கைப்பற்றினா்.

ஆனால் இரண்டாவது கேம் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. 8-8 என சமநிலை ஏற்பட்டு சீன தரப்பு 11-8 என முன்னிலை பெற்றது.

பின்னா் இந்திய தரப்பு ஆதிக்கம் செலுத்தி 14-9 என முன்னிலை பெற்றாலும், சீன வீரா்கள் பதிலடி தந்த நிலையில், 20-20, 22-22 என சமநிலை ஏற்பட்டது. கடைசியில் நான்காவது மேட்ச் புள்ளியைப் பெற்ற இந்திய இணை இரண்டாவது கேமை 24-22 எனக் கைப்பற்றியது.

நிகழாண்டு இந்தோனேசிய சூப்பா் 1000, சுவிஸ் ஓபன் சூப்பா் 500 போட்டிகளில் சாத்விக்-சிராக் பட்டம் வென்றிருந்தனா்.

பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 4 சூப்பா் 1000, 6 சூப்பா் 750, 7 சூப்பா் 500, 11 சூப்பா் 300 என போட்டிகள் நடத்தப்பட்டு ரேங்கிங் புள்ளிகளும் தரப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com