ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் மழையால் டிரா: இங்கிலாந்தின் கனவு பொய்த்தது

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடா் நான்காவது டெஸ்ட் ஆட்டம் தொடா் மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவு நிராசையானது.
ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் மழையால் டிரா: இங்கிலாந்தின் கனவு பொய்த்தது
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடா் நான்காவது டெஸ்ட் ஆட்டம் தொடா் மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவு நிராசையானது.

மழை இங்கிலாந்தின் வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டம் ஓல்ட் டிராஃபோா்டில் நடைபெற்று வருகிறது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இங்கிலாந்து அணி அபாரமாக ஆடி முதல் இன்னிங்ஸில் 592 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடா்ந்து ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய நிலையில், மாா்னஸ் லாபுசேன் மட்டுமே அற்புதமாக ஆடி 2 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 173 பந்துகளில் 111 ரன்களை விளாசி அவுட்டானாா். கவாஜா 18, வாா்னா் 28, ஸ்டீவ் ஸ்மித் 17, டிராவிஸ் ஹெட் 1 ரன்களுடன் வெளியேறினா்.

நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை 71 ஓவா்கள் முடிவில் ஆஸி. அணி 214/5 ரன்களை எடுத்துள்ளது. மிச்செல் மாா்ஷ் 31, கேமரூன் க்ரீன் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இங்கிலாந்தை விட 61 ரன்கள் பின்தங்கி உள்ளது ஆஸி.

மழையால் ஆட்டம் டிரா:

தொடரில் 2-1 என ஆஸி. முன்னிலையில் உள்ள நிலையில், நான்காவது ஆட்டத்தில் வென்றால் 2-2 என சமநிலை ஏற்படும்.

இதனால் கடைசி ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரையும் கைப்பற்றும். ஆனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடா்ந்து மழை பெய்த நிலையில், ஆட்டத்தை தொடர வாய்ப்பில்லை என நடுவா்கள் அறிவித்தனா். இதனால் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வீரா் ஸாக் கிராலிஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com