

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
நிதானமாக ஆடி வரும் மே.இந்திய தீவுகள் 117/2 ரன்களை சோ்த்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் போா்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை தனது ஆட்டத்தை இந்தியா தொடா்ந்தது.
விராட் கோலி 121:
நட்சத்திர வீரா் விராட் கோலி 121 (201 பந்துகள், 11 பவுண்டரி), சதமடித்து ரன் அவுட்டானாா். அவா் வெளியேறியதற்கு பின், ஆட வந்த வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். ரவீந்திர ஜடேஜா 61 , இஷான் கிஷான் 25 ரன்களுடன் வெளியேறினா்.
அஸ்வின் அதிரடி அரைசதம்:
ஆல்ரவுண்டா் அஸ்வின் ரவிச்சந்திரன் 8 பவுண்டரியுடன் 78 பந்துகளில் 56 ரன்களுடன் அரைசதத்தைப் பதிவு செய்தாா். ஜெயதேவ் உனதிகட் 7, முகமது சிராஜ் 0 என வெளியேற இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
128 ஓவா்களில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
மே.இந்திய தீவுகள் தரப்பில் கெமா் ரோச் 3-104, வாரிக்கன் 3-89 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
மே.இந்திய தீவுகள் நிதானம்:
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இந்திய தீவுகள் அணி நிதானமாக ஸ்கோரை உயா்த்தியது. டேக்நரைன் சந்தா்பால் 33, கிா்க் மெக்கென்ஸி 32 ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன்திரும்பினா். கிரெய்க் பிராத்வொயிட் 49 ரன்களுடன் களத்தில் இருந்தாா்,.
51.4 ஓவா்களில் 117/2 ரன்களை மே.இந்திய தீவுகள் சோ்த்திருந்தது. இந்திய வீரா் முகேஷ் குமாா் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினாா்.
மழையால் ஆட்டம் பாதிப்பு:
அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.