ரிஷப் பந்த்தினை போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்த இஷான் கிஷன்: வைரல் விடியோ!
By DIN | Published On : 24th July 2023 04:56 PM | Last Updated : 24th July 2023 04:56 PM | அ+அ அ- |

படம்: ட்விட்டர்
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மே.இ.தீ.அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையும் படிக்க: க்ளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு!
இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 24 ஓவர்களுக்கு 181/2 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய மே.இ.தீ.அணி 4ஆம் நாள் முடிவில் 76/2 ரன்கள் எடுத்துள்ளது. மே.இ.தீ.அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படுகிறது.
Ishan Kishan thanked Rishabh Pant for helping in bat positions before going to WI Tests.
— Johns. (@CricCrazyJohns) July 24, 2023
Both were openers for India U-19 in 2016 WC with Ishan leading the team and today he had "RP 17" written in his bat.
A beautiful story in Indian cricket. pic.twitter.com/5gxB6mVjHY
இதையும் படிக்க: நா ரெடி பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ!
இதில் இந்தியா சார்பாக 2வது இன்னிங்ஸில் இஷான் கிஷன் 34 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். அதிலும் ரிஷப் பந்த்தினைப் போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தினை நிறைவு செய்தார். மேலும் தனது பேட்டில் ரிஷப் பந்த்தின் ஆர்பி17 என எழுத்துரு இருந்தது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
THE ISHAN KISHAN SHOW pic.twitter.com/ynbvvVNoTm
— Johns. (@CricCrazyJohns) July 23, 2023
போட்டி முடிந்தப் பிறகு இஷான் கிஷன், “என்சிஏவில் இருந்தபோது ரிஷப்பும் உடன் இருந்தார். எங்கள் இருவருக்கும் யு-19இல் இருந்தே பழக்கம் உள்ளது. எனக்கும் யாராவது உதவுவார்களா என்றிருந்த வேளையில் ரிஷப் பந்த் எனது பேட்டிங் பொஸிஷன் குறித்து கூறியது மிகவும் உதவியாக இருந்தது” எனக் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...