சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஐபிஎல்லில் 2021இல் 635 ரன்களும், 2022இல் 368 ரன்களும், 2023இல் 590 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது தனது காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் முடித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். திருமணம் இருப்பதால் ஜெய்ஸ்வால் தேர்வானார். ஆனால் இன்னும் சில நாள்களில் ருதுராஜ் இங்கிலாந்து செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருதுராஜ் காதலியும் மனைவியுமான உட்கர்ஷா பவார்:
11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடும் உட்கர்ஷா மகாராஷ்டிரம் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். மகளிர் ஐபிஎல்லில் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. ஆனால் நல்ல ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புணேவில் உடல்நலம் ஊட்டசத்து குறித்த பிட்னஸ் பாடப்பிரிவில் படித்து வருகிறார். சிஎஸ்கே இறுதிப் ப முடிந்தப் பிறகு முக்கியமான நபர்கள் என ருதுராஜ் தோனியுடன் உட்க்ர்ஷா புகைப்படத்தினையும் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் உட்கர்ஷா வைரலானார்.
இந்நிலையில் ஜூன் 3இல் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ருதுராஜ் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.