சர்ச்சைக்குரிய இன்ஸ்டா ஸ்டோரி நீக்கம்: மன்னிப்பு கேட்ட யஷ் தயாள்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவையாக இருந்தபோது பந்தில் ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அபோதுதான் இருவரும் சமூக வலைதளங்களில் பிரபலமானார்கள்.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த அஸ்வின்!
தற்போது யஷ் தயாள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சர்சைக்குள்ளான போஸ்டரை பகிர்ந்திருந்தார். அதில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக இருந்தது. லவ் ஜிகாத் குறித்த போஸ்டர் இருந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் அதனை நீக்கினார். நீக்கிவிட்டு, “தவறுதலாக அந்த ஸ்டோரி பதிந்துவிட்டது. வெறுப்பை பரப்பாதீர்கள். நன்றி. அனைத்துவிதமான சமூகத்தினையும் நான் மதிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். யாரோ அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை ஹேக் செய்துள்ளதாகவும் அதானால் இது குறித்து யஷ் தயாள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அது எப்படி தவறுதலாக போட முடியுமென கிண்டல் செய்து வருகின்றனர்.