கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டபிள்யுடிசி: எத்தனை மணிக்கு தொடக்கம்? நேரலையாக எதில் பார்க்கலாம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 3மணிக்கு தொடங்குகிறது. 

News image
Updated On :6 ஜூன் 2023, 3:21 pm

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் (நாளை) ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story image

இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. 

Story image

இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி துவங்குகிறது. முதல் செஷன் 3மணி முதல் 5வரைக்கும், இரண்டாவது செஷன் 5.40 முதல் 7.40 வரைக்கும், மூன்றாவது செஷன் இரவு 8மணி முதல் 10 மணி வரை நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.  

நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும் டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.