பெரிய அணிக்கு செல்லமாட்டேன்; எனது அணியை பெரிய அணியாக்குவேன்: சஞ்சு சாம்சனின் சபதம்! 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தான் விளையாடும் அணியை பெரிய அணியாக மாற்றுவேன் என கூறியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராஜஸ்தான் அணி 2022இல் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்றது. இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியுற்றது. அந்தத் தொடரில் 458 ரன்கள் 147 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடினார். 2023இல் ப்ளே-ஆஃப் செல்ல முடியாமல் வெளியேறியது. சஞ்சு சாம்சன் 362 ரன்கள் எடுத்திருந்தார். பாதி ஐபிஎல் ஆட்டம்வரை முதலிடத்தில் இருந்ததும் ராஜஸ்தான் அணி பின்னர் தகுதி பெறாமல் வெளியேறியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் தொடங்கிய முதல் வருடத்தில் கோப்பையை வென்றது. பின்னர் ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை எனபது குறிப்பிடத்தக்கது. 

நல்ல திறமையான பேட்டராக இருந்தாலும் முக்கியமான நேரத்தில் சாம்சன் சரியாக ஆடவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஒருவர் நீ ஐபிஎல்லில் பெரிய அணிக்காக விளையாடு என்று அக்கறையோடு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சஞ்சு சாம்சன், “நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெரிய அணியாக மாற்ற வேண்டும். சஹால், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை அணியில் எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் பயிற்சியாளர் கூறுகையில், “சாம்சனுக்கு ஒரு தொலை நோக்கு பார்வையுள்ளது” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com