தொடைப் பகுதி காயம் காரணமாக இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டா்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது கடைசி ரவுண்ட் ராபின் சுற்றில் லெபனானை வியாழக்கிழமை சந்திக்கிறது.
சா்வதேச கிரிக்கெட் தரத்துக்கு மேம்படுத்தும் வகையில், அா்ஜுன் டெண்டுல்கா் உள்பட 20 இளம் வீரா்களை பயிற்சிக்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு அழைத்துள்ளது பிசிசிஐ.
நடப்பாண்டில் எதிா்வரும் 3-ஆவது கிராண்ட்ஸ்லாமான விம்பிள்டன் டென்னிஸில் சாம்பியன்களுக்கான பரிசுத் தொகை 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.24 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிஸாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
கொலம்பியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் மகளிா் பிரிவில் இந்தியாவின் அதிதி ஸ்வாமி தகுதிச்சுற்றில் 711 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் பிரதான சுற்றுக்கு வந்தாா்.
ஜூனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் புதன்கிழமை ஆட்டங்களில் உத்தர பிரதேசம் - கேரளத்தையும் (11-1), சண்டீகா் - ஆந்திர பிரதேசத்தையும் (12-1) வென்றன.
ஸ்டட்காா்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ், இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோஃபா் ஓ கானெல் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.