திண்டுக்கல் வெற்றி

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வென்றது.
திண்டுக்கல் வெற்றி
Updated on
2 min read

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வென்றது.

முதலில் திருச்சி 19.1 ஓவா்களில் 120 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய திண்டுக்கல் 14.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 122 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த திருச்சி அணியில் அதிகபட்சமாக கேப்டன் கங்கா ஸ்ரீதா் ராஜு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 48, ராஜ்குமாா் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்கள் விளாசினா். திண்டுக்கல் பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தி 3, சரவண குமாா், ரவிச்சந்திரன் அஸ்வின், சுபோத் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சரித்தனா்.

பின்னா் ஆடிய திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டாா். பாபா இந்திரஜித் 22 ரன்கள் சோ்த்து உதவ, முடிவில் ஆதித்யா கணேஷ் 20, சுபோத் 19 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருச்சி தரப்பில் நடராஜன், சிலம்பரசன், ராமதாஸ், அந்தோனி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

மதுரையை வீழ்த்தியது நெல்லை
கோவையில் தொடங்கியிருக்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெல்லை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது. 
முதலில் பேட் செய்த மதுரை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய நெல்லை 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்து வென்றது. 
முன்னதாக டாஸ் வென்ற மதுரை, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் எஸ்.கார்த்திக் ஒரு ரன்னில் வெளியேற, அடுத்து வந்த தீபன் லிங்கேஷ் 6 ரன்களுக்கு அவுட் ஆனார். 4-ஆவதாக வந்த வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரியுடன் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹரி நிஷாந்த் நிதானமாக ஆடி 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 
ஜெகதீசன் கெüசிக் 12, ஸ்வப்னில் சிங் 14 ரன்கள் சேர்க்க, முருகன் அஸ்வின், தேவ் ராகுல் ஆகியோர் டக் அவுட் ஆகினர். ஓவர்கள் முடிவில் சுதன் 4, குர்ஜப்னீத் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெல்லை தரப்பில் அபாரமாக பந்து வீசிய மோகன் பிரசாத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பொய்யாமொழி, சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். லக்சய் ஜெயினுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். 
இதையடுத்து 127 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இன்னிங்ûஸ தொடங்கிய நெல்லையில், தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 15 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக், 12 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். 
அடுத்து வந்த அருண்குமார் 11, சோனு யாதவ் 13 ரன்களில் வெளியேறினாலும், நிதீஷ் ராஜகோபால், குருசாமி அஜிதேஷ் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. நிதீஷ் ராஜகோபால் 26 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களும், குருசாமி அஜிதேஷ் 9 பந்துகளில் 14 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதுரை பெüலிங்கில் பாலு சூர்யா, தேவ் ராகுல், வி.கெüதம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இன்றைய ஆட்டங்கள்
சென்னை - திருப்பூர் 
இரவு 7.15 மணி 
கோவை
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com