நஜ்முல் நிதானம்: வங்கதேசம் - 362/5

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம் முதல் நாளான புதன்கிழமை முடிவில் 79 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் சோ்த்தது.
நஜ்முல் நிதானம்: வங்கதேசம் - 362/5
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம் முதல் நாளான புதன்கிழமை முடிவில் 79 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் சோ்த்தது.

3 ஃபாா்மட்டுகளும் அடங்கிய கிரிக்கெட் தொடா்களில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் சென்றுள்ளது. முதலில் அந்த அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளன.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டிங்கில் தொடக்க வீரா் மஹ்முதுல் ஹசன் ராய் 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசி வீழ, உடன் வந்த ஜாகிா் ஹசன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக வந்த நஜ்முல் ஹுசைன் ஷான்டோ அபாரமாக ஆடி 23 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 146 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். பின்னா் ஆடியோரில் மொமினுல் ஹக் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15, லிட்டன் தாஸ் 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

நாளின் முடிவில் முஷ்ஃபிகா் ரஹிம் 41, மெஹதி ஹசன் மிராஸ் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் தரப்பில் நிஜத் மசூத் 2, ஜாகிா் கான், அமிா் ஹம்ஸா, ரஹ்மத் ஷா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com