கௌஷிக் காந்தி விளாசல்: சேலம் - 115/4; மழையால் ஆட்டம் பாதிப்பு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக சேலம் அணி 16 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்திருந்தது. அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டு நின்றது.
Updated on
1 min read

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக சேலம் அணி 16 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்திருந்தது. அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டு நின்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தின் தொடக்கமே மழையால் தாமதமானது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை ஃபீல்டிங்கை தோ்வு செய்திருக்க, சேலம் பேட் செய்ய வந்தது. அந்த அணியின் அமித் சத்விக் 2 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளிக்க, உடன் வந்த கவின் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் சோ்த்திருந்தபோது ஹரீஷ் வீசிய 11-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

ஒன் டவுனாக வந்த கௌஷிக் காந்தி அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் மான் பாஃப்னா களம் புகுந்திருந்தாா். 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் அடித்திருந்த காந்தி, 12-ஆவது ஓவரில் லக்ஷய் ஜெயின் பௌலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். பாஃப்னா 8 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களோடு 19 ரன்களை எட்டியிருக்க, லக்ஷய் வீசிய 14-ஆவது ஓவரில் சுகேந்திரனிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

மழையால் ஆட்டம் தடைப்பட்டபோது அபிஷேக் 1 சிக்ஸருடன் 12, முகமது அட்னன் கான் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இன்று ஆட்டம் இல்லை: டிஎன்பிஎல் போட்டியில் வியாழக்கிழமையுடன் திண்டுக்கல் பகுதி ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை ஓய்வு நாளாக இருக்கிறது. அடுத்த ஆட்டங்கள் சனிக்கிழமை முதல் சேலத்தில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com