தோனியால் வைரலான கேண்டி கிரஷ்: 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் பதிவிறக்கம்!
By DIN | Published On : 26th June 2023 01:29 PM | Last Updated : 26th June 2023 01:29 PM | அ+அ அ- |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கேண்டி கிரஷ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானத்தில் தோனி அவரது மனைவியுடன் பயணம் செய்யும் விடியோ ஒன்று ஞாயிற்றுக்கிழமை வைரலானது. விமானத்தில் டேப்புடன் அமர்ந்திருந்த தோனியின் அருகில் சென்ற விமானப் பணிப்பெண் அவருக்கு சாக்லெட்டை பரிசாக வழங்கினார்.
அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட தோனி, அந்த பணிப்பெண்ணுடன் சிறிது விநாடிகள் உரையாடினார்.
இதையும் படிக்க | ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்தார் கமல்ஹாசன்!
இந்த காணொலி சமூக ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை வைரலாகத் தொடங்கியது.
இந்நிலையில், தோனி வைத்திருந்த டேப்பிள், அவர் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர்கள் கேண்டி கிரஷ் விளையாட்டையும் வைரலாக்கினர்.
இதன் விளைவாக அடுத்த 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் புதிதாக கேண்டி கிரஷ் விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
MS Dhoni - the crowd favourite. pic.twitter.com/ltpud9P9Jj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 25, 2023
இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள கேண்டி கிரஷ் நிறுவனம், “உங்களால்தான் நாங்கள் டிரெண்டாகியுள்ளோம். நன்றி.” எனத் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...