கமல் பண்பாட்டு மையம் சார்பில் கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை கடந்த வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது பேருந்தில் பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பலராலும் பாராட்ட ஷர்மிளா இதனால் வேதனை அடைந்தார். ஓட்டுநர் ஷர்மிளாவை பணியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை என்று தனியார் பேருந்து நிறுவனம் கூறியது.
இந்நிலையில் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மாற்று வேலை உறுதி என கனிமொழி எம்.பி. கூறினார்.
இதையும் படிக்க | ஷர்மிளாவுக்கு மாற்று வேலை: கனிமொழி உறுதி
சில நாள்களுக்கு முன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஷர்மிளாவை சந்தித்து வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், கமல் பண்பாட்டு மையம் சார்பில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
மேலும் 'தன் வயதையொத்த பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தற்போது வாடகை கார் ஓட்டுநராக ஷர்மிளா தொழில் முனைவோர் அவர் தனது பயணத்தைத் தொடரவிருக்கிறார். அவர் பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டும் என்பதே என் நம்பிக்கை' என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.