மே.இ.தீவுகள் 374 ரன்கள் அடித்தும் வீண்: சூப்பர் ஓவரில் நெதலர்லாந்து அணி வெற்றி! 

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் விறுவிறுப்பாக நடந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. 
படம்: ட்விட்டர் | ஐசிசி
படம்: ட்விட்டர் | ஐசிசி

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான குவாலிஃபையா் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  இதில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் 50 ஓவர் முடிவில் மே.இ.தீவுகள் அணி 374/6 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய பிராண்டன் கிங் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். 

பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரண் அற்புதமாக விளையாடினார்கள். இதில் நிகோலஸ் பூரண் 65 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும். 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் இதிலடங்கும். இறுதியில் அதிரடியாக ஆடிய கீமோபால் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 50 ஓவரில் 374/6 ரன்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய நெதர்லாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 374/9 ரன்கள் எடுத்தது. தேஜா நிடமானுரு 76 பந்துகளில்  111 ரன்கள் எடுத்து அசத்தினார். சூப்பர் ஓவரில் ஹோல்டர் பந்து வீச நெதர்லாந்து அணி 30 ரன்கள் குவித்தது. 30 ரன்களையும் அடித்தது அதிரடி வீரர் லோகன் வான் பீக் ஆவர். ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். 

அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. முன்னாள் உலகச் சாம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணி இப்படி தோல்வியடைவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com