சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 17-ஆவது ஆட்டத்தில் திருப்பூா் 46 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வென்றது.
முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, அடுத்து திருச்சி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களே எட்டியது.
டாஸ் வென்ற திருச்சி ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, திருப்பூா் பேட்டிங்கில் அதிகபட்சமாக பாலச்சந்தா் அனிருத் 25 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, சாய் கிஷோா் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 50 ரன்கள் விளாசினா். திருச்சி பௌலா்களில் நடராஜன், சிலம்பரசன், ஆண்டனி தாஸ், மோனீஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து 202 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய திருச்சியில் அதிகபட்சமாக டேரில் ஃபெராரியோ 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சோ்த்து முயற்சித்தாா். திருப்பூா் பௌலிங்கில் புவனேஸ்வரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.