இன்ஸ்டாகிராமில் ரிஷப் பந்த் உருக்கமான பதிவு!
By DIN | Published On : 29th June 2023 04:07 PM | Last Updated : 29th June 2023 04:07 PM | அ+அ அ- |

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், அவர் கார் விபத்தில் சிக்கிய உயிர்பிழைத்த நாளான ஜனவரி 1, 2023 தினத்தை தனது இரண்டாவது பிறந்தநாளாகப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு தனது இல்லத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்பட பல போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ரிஷப் பந்த்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் தனக்கு விபத்து ஏற்பட்டு உயிர்பிழைத்த நாளை தனது இரண்டாவது பிறந்த நாள் எனப் பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...